/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
2 அமைச்சர்களை தொடர்ந்து தி.மு.க.,வும் வீட்டிற்கு செல்லும் உதயகுமார் ஆரூடம்

ADDED : மே 04, 2025 04:56 AM
வாடிப்பட்டி : வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் இரும்பாடி, பாலகிருஷ்ணாபுரம், கீழ நாச்சிகுளத்தில் 9 பேர் கொண்ட பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் நடந்தது
அவர் பேசியதாவது: தமிழக அரசியல் வரலாற்றிலேயே ஒரு அரசு நடந்து கொண்டிருக்கும்போது நீதிமன்ற உத்தரவில் 2 அமைச்சர்கள் கோட்டையை விட்டு வீட்டிற்கு செல்வது, தி.மு.க., அரசு விரைவில் வீட்டுக்கு செல்வதற்கான அச்சாரம்.
பார்ட் ஒன்னே கிழி, கிழி என கிழிந்து விட்டது. எனவே பார்ட் 2வில் தி.மு.க., அரசை மக்கள் வீட்டுக்கு அனுப்பி விடுவர். ஒரு முதல்வருக்கு மகனாக பிறந்து, எம்.எல்.ஏ., மேயர், அமைச்சர், துணை முதல்வர் என முதல்வராகி தற்போது தன் மகனை முதல்வராக்க கனவு காண்பதை சாதனை என வேதனையில் உள்ள தமிழக மக்கள் ஏற்றுக் கொள்வார்களா.
ஆட்சியில் இல்லாமல், ஒரு எம்.பி., கூட இல்லாமல் முன்னாள் முதல்வர் பழனிசாமி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசி ஆறு மாத 100 நாள் வேலை சம்பளத்தை தமிழகத்திற்கு பெற்றுத் தந்துள்ளார் என்றார்.