/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பொறியியல் கல்லூரியில் பரிசோதனை மையம்
/
பொறியியல் கல்லூரியில் பரிசோதனை மையம்
ADDED : அக் 04, 2024 06:38 AM
திருப்பரங்குன்றம்: மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி டி.எஸ்.சீனிவாசன் வாகன ஆராய்ச்சி மையத்தில், எலக்ட்ரானிக் பொருட்கள் பரிசோதனை சிறப்பு மையத் திறப்பு விழா நடந்தது.
கல்லுாரி சேர்மன் ஹரி தியாகராஜன் தலைமை வகித்தார். இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் உற்பத்தி ஒருங்கிணைப்பு, சேவை தொடர்புகள் இயக்குநர் சந்திரிகா கவுசிக் திறந்து வைத்தார். கல்லுாரி முதல்வர் அசோக்குமார் வரவேற்றார்.
இதில் கலப்பு சிக்னல் போர்டு சரிபார்ப்பு. இது கட்டுப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் நிலைமைகளின் கீழ் ஆண்டெனா வடிவமைப்புகளின் துல்லியமான மதிப்பீடு மற்றும் சரிபார்ப்புக்கு அனுமதிக்கிறது எனக் கல்லுாரியில் தெரிவித்தனர்.

