/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் ஆக.15 -17 வரை இன்ஜினியர்ஸ் பில்ட் எக்ஸ்போ
/
மதுரையில் ஆக.15 -17 வரை இன்ஜினியர்ஸ் பில்ட் எக்ஸ்போ
மதுரையில் ஆக.15 -17 வரை இன்ஜினியர்ஸ் பில்ட் எக்ஸ்போ
மதுரையில் ஆக.15 -17 வரை இன்ஜினியர்ஸ் பில்ட் எக்ஸ்போ
ADDED : ஆக 10, 2025 03:31 AM
மதுரை: மதுரை தமுக்கத்தில் கட்டட பொறியாளர்கள் சங்கம் சார்பில் 'இன்ஜினியர்ஸ் பில்ட் எக்ஸ்போ' எனும் கட்டட கண்காட்சி ஆக., 15 முதல் 17 வரை தலைவர் குமரேஷ் பாபு தலைமையில் நடக்கிறது.
பல்வேறு மாநிலங்களில் இருந்து கட்டுமான தொழில் நிறுவனங்கள், புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பகளை காட்சிப்படுத்தி விளக்கம் அளிக்கின்றனர்.மண் பரிசோதனை, மனைப்பிரிவு, அடுக்குமாடி கட்டுமான நிறுவனங்கள், டி.எம்.டி., கம்பி, பெயின்ட், உள்-வெளிப்புற வடிவமைப்பாளர்கள், சோலார், பயோ செப்டிக் டேங்க், பழைய கட்டடத்தை உயர்த்தும், நகர்த்தும் தொழில்நுட்பம் உள்ளிட்டவை குறித்து அரங்குகள் அமைகின்றன. மாலை 6:00 மணிக்கு கனவு இல்லம், இயற்கை பொருட்களை கொண்டு வீடு கட்டுதல் குறித்து நிபுணர்களின் ஆலோசனை வழங்கப்படுகிறது. ஆக., 15, 16ல் பார்வையாளர்கள் தங்கள் கனவு இல்லத்தை 'விர்ச்சுவல் ரியாலிட்டி' மூலம் வடிவமைத்து பரிசு பெறலாம்.
சங்கத் தலைவர் பொன் ரவிச்சந்திரன், கண்காட்சிதுணைத் தலைவர் மணிகண்டன், கோபிதாஸ், ஆலோசகர் ராமசாமி, பொருளாளர் ரிஷிகேசன், செயலாளர் முகுந்தன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்துள்ளனர். தினமும் காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை பார்வையிடலாம். அனுமதி இலவசம். விவரங்களுக்கு: 99658 56816.

