/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சமுதாய கூடத்தில் தி.மு.க.,வின் இலவச 'டிபன் பாக்ஸ்' மூடைகள்
/
சமுதாய கூடத்தில் தி.மு.க.,வின் இலவச 'டிபன் பாக்ஸ்' மூடைகள்
சமுதாய கூடத்தில் தி.மு.க.,வின் இலவச 'டிபன் பாக்ஸ்' மூடைகள்
சமுதாய கூடத்தில் தி.மு.க.,வின் இலவச 'டிபன் பாக்ஸ்' மூடைகள்
ADDED : செப் 09, 2025 04:27 AM

வாடிப்பட்டி: வாடிப்பட்டியில் சமுதாயக்கூடத்தை ஆக்கிரமித்துள்ள தி.மு.க.,வின் 'டிபன் பாக்ஸ்' மூடைகளால் பொதுமக்கள் இல்ல நிகழ்ச்சிகளை நடத்த சிரமப்படுகின்றனர்.
இப்பேரூராட்சியின் 4வது வார்டு பொன் பெருமாள் மலை அடிவாரத்தில் கடந்த 2011ல் ரூ.20 லட்சம் செலவில் கட்டப்பட்ட சமுதாயக்கூடம் உள்ளது. இப்பகுதியினர் குறைந்த செலவில் தங்கள் இல்ல நிகழ்ச்சிகளை இங்கு நடத்தி வந்தனர். முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க., சார்பில் சோழவந்தான் தொகுதி அலங்காநல்லுார் ஒன்றிய பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவியாக 'டிபன் பாக்ஸ்' வழங்கப்பட்டது.
அதேபோல் வாடிப்பட்டி பேரூராட்சி, ஒன்றிய பகுதியில் வழங்க 5 மாதங்களாக இந்தச் சமுதாய கூடத்தில் 2 லாரி லோடு டிபன் பாக்ஸ் மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் இம்மண்டபத்தை பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். தனியார் மண்டபங்களில் அதிக செலவில் நிகழ்ச்சிகளை நடத்தும் நிலை உள்ளது. கட்சி நிகழ்ச்சிக்காக சமுதாயக் கூடத்தை பயன்படுத்தும் தி.மு.க., சார்பில் வாடகை எதுவும் கொடுப்பதாக தெரியவில்லை.
பேரூராட்சியில் கேட்டபோது, 'ஆறுமாதங்களாக சமுதாயகூடத்தில் பேரூராட்சி அலுவலகத்தின் கட்டுமான பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதால் பயன்பாட்டில் இல்லை. அத்துடன் 'டிபன் பாக்ஸ்' மூடைகள், உடைகள் உள்ளன' என்றனர்.