/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பா.ஜ., மாநில மையக்குழுவில் முக்கிய பிரமுகர்கள் வெளியேற்றத்தால் அதிருப்தி மாவட்ட மையங்களிலும் முணுமுணுப்பு
/
பா.ஜ., மாநில மையக்குழுவில் முக்கிய பிரமுகர்கள் வெளியேற்றத்தால் அதிருப்தி மாவட்ட மையங்களிலும் முணுமுணுப்பு
பா.ஜ., மாநில மையக்குழுவில் முக்கிய பிரமுகர்கள் வெளியேற்றத்தால் அதிருப்தி மாவட்ட மையங்களிலும் முணுமுணுப்பு
பா.ஜ., மாநில மையக்குழுவில் முக்கிய பிரமுகர்கள் வெளியேற்றத்தால் அதிருப்தி மாவட்ட மையங்களிலும் முணுமுணுப்பு
ADDED : டிச 21, 2025 05:10 AM
மதுரை: தமிழக பா.ஜ., மாநில மையக்குழுவில் பொதுச் செயலாளர்கள் உட்பட முக்கிய பிரமுகர்கள் கழற்றி விடப்பட்டதால் நிர்வாகிகளிடையே குமுறல் எழுந்துள்ளது.
பா.ஜ., வின் நிர்வாகத்தில் மையக்குழு என்பது முக்கியமான அமைப்பு. கட்சி கட்டமைப்பில் தேசிய, மாநில, மாவட்ட, மண்டல அளவிலும் இந்த அமைப்புகள் உள்ளன. மாநில அமைப்பை பொறுத்தவரை மாநில தலைவர், செயலாளர், பொருளாளர், முன்னாள் மாநில தலைவர்கள், தற்போதைய பொதுச் செயலாளர்கள், தேசிய அளவில் பொறுப்பில் உள்ளோர், மாநில பார்வையாளர்கள் என பலரும் இடம்பெறுவர்.
தமிழகத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அமைப்புச் செயலாளர் கேசவவிநாயகம், முன்னாள் தலைவர்கள் பொன்ராதாகிருஷ்ணன், தமிழிசை, எச்.ராஜா, வானதி சீனிவாசன், மாநில பொறுப்பாளர்கள் சுதாகர் ரெட்டி, அரவிந்த், ஏ.பி.முருகானந்தம் உட்பட பலரும் இருந்தனர்.
நீக்கப்பட்ட பிரமுகர்கள் இந்தக் குழுதான் மாநில அளவிலான செயல் திட்டங்களை வகுத்து, மாவட்ட, மண்டல, கிளை நிர்வாகிகள் வரை அனுப்பும். சமீபத்தில் இக்குழுவில் இடம் பெற்றிருந்த மாநில பொதுச் செயலாளர்கள், செயலாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
இவ்வகையில் ஏ.பி.முருகானந்தம், கருப்பு முருகானந்தம், கார்த்திகாயினி, பொன்பால கணபதி, ராமசீனிவாசன், எஸ்.ஆர்.சேகர், கதலிநரசிங்க பெருமாள் உட்பட பலர் மையக்குழுவில் இடம்பெறவில்லை. இதனால் கடந்த 2 மாநில மைய குழுக் கூட்டங்களில் இவர்கள் பங்கேற்கவில்லை.
கட்சியில் முன்னாள் தலைவர்களைப் பொறுத்தவரை மாநில அளவிலான பிரச்னைகளில் ஆலோசனை வழங்குவர். அதேசமயம் செயலாளர்,
பொதுச் செயலாளர்களே அந்தந்த பகுதியில் முக்கியத்துவம் பெற்றவர்கள். அந்தந்தப் பகுதி நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட அடிமட்டம் வரை நிகழ்வுகள் தெரியும்.
எனவே மையக்குழு முடிவெடுக்க அவர்களின் கருத்துக்கள் உதவியாக இருக்கும். தற்போதைய சூழலில் கட்சி நிர்வாகம், தொண்டர்களிடையே நேரடி தொடர்புள்ளோருக்கு இடமில்லாத நிலை உள்ளதென கருதுகின்றனர்.
இதேபோல மாவட்ட மையக்குழுவில் முன்னாள் தலைவர்களுக்கு இடமில்லை. தேசிய, மாநில மையக்குழுவில் முன்னாள் தலைவர்கள் இடம்பெறுவது போல, மாவட்டங்களிலும் இடம்பெற வேண்டும். அப்போதுதான் கட்சியின் ஆரோக்கியத்தை பேண முடியும் என்கின்றனர் நிர்வாகிகள்.

