/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மக்கள் நலனை பேரூராட்சியே புறக்கணிப்பதா 'செப்டிக் டேங்க்' கழிவால் அதிருப்தி

ADDED : செப் 20, 2025 04:14 AM

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் பேரூராட்சி பஸ் ஸ்டாண்டில் 'செப்டிக் டேங்க்' கழிவு நீரை வடிகாலில் வெளியேற்றுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
இந்த பஸ் ஸ்டாண்டில் ரூ.1.49 கோடியில் மேம்பாட்டு பணிகள் நடந்தன. ஜன.12ல் அமைச்சர்கள் நேரு, மூர்த்தி வணிக வளாகத்தை திறந்து வைத்தனர். புதிதாக கட்டப்பட்ட கழிப்பறையின் 'செப்டிக் டேங்க்' சிறிய அளவில் உள்ளதால் 4 நாள் அல்லது ஒரே வாரத்தில் நிரம்பி விடுகிறது. இதன்பின் கழிப்பறையை பலநாட்களுக்கு பயன்படுத்த முடியாமல் பூட்டி வைக்கின்றனர்.
பஸ் ஸ்டாண்ட் வரும் பயணிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இரவு நேரத்தில் 'செப்டிக் டேங்க்' கழிவு நீரை மோட்டார் குழாய் மூலம் பேரூராட்சி நிர்வாகம் மெயின் ரோட்டில் உள்ள வடிகாலில் வெளியேற்றுகிறது. அக்கழிவுகள் வழிந்தோடி இங்குள்ள கடைக்கு பின்பக்கம் தேங்கி நிற்கிறது. அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு நிலவுகிறது. 'செப்டிக் டேங்கை' மாற்றி அமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.