/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சி.பி.எஸ்., ஒழிப்பு காத்திருப்பு போராட்டம்
/
சி.பி.எஸ்., ஒழிப்பு காத்திருப்பு போராட்டம்
ADDED : மார் 01, 2024 06:43 AM

மதுரை : புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி சி.பி.எஸ்., (கான்ட்ரிபியூஷன் பென்ஷன் ஸ்கீம்) ஒழிப்பு இயக்கத்தினர் நீண்ட காலமாக போராடி வருகின்றனர். இவ்வகையில் நேற்று காத்திருப்பு போராட்டத்தை துவக்கியுள்ளனர்.
மதுரை கலெக்டர் அலுவலகம் எதிரே மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் தலைமை வகித்தார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளாட்சிப் பணியாளர்கள் சங்க கூட்டமைப்பின் மாவட்ட அமைப்பாளர் முனியசாமி துவக்கி வைத்தார். சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ ராஜேஸ்வரன், இணை ஒருங்கிணைப்பாளர் சரவணன் கோரிக்கையை விளக்கி பேசினர். இதில் அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் கல்யாணசுந்தரம், மாரியப்பன், சின்னப்பொண்ணு, வளர்மதி, வேல்முருகன், மாரி, டான்சாக் மனோகரன், ரமேஷ், அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மேனகா பங்கேற்றனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குணாளன் நன்றி கூறினார்.

