/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மோட்டார் பழுது காரணமாக குடிநீர் பிரச்னை ஏற்பட கூடாது கமிஷனர் எச்சரிக்கை
/
மோட்டார் பழுது காரணமாக குடிநீர் பிரச்னை ஏற்பட கூடாது கமிஷனர் எச்சரிக்கை
மோட்டார் பழுது காரணமாக குடிநீர் பிரச்னை ஏற்பட கூடாது கமிஷனர் எச்சரிக்கை
மோட்டார் பழுது காரணமாக குடிநீர் பிரச்னை ஏற்பட கூடாது கமிஷனர் எச்சரிக்கை
ADDED : மார் 21, 2024 02:17 AM
மதுரை: ''மதுரையில் மோட்டார்கள் பழுது காரணமாக வார்டுகளில் குடிநீர் பிரச்னை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார் எச்சரித்தார்.
மாநகராட்சியில் தடையின்றி குடிநீர் வினியோகம் மேற்கொள்வது தொடர்பான ஆய்வுக்கூட்டம் கமிஷனர் தலைமையில் நடந்தது. தலைமை பொறியாளர் ரூபன் சுரேஷ், செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், குழாய்ப் பதிப்பு ஒப்பந்ததாரர்கள் பங்கேற்றனர்.
இதில் பேசிய கமிஷனர், 'கோடைகாலம் துவங்கிவிட்டது. மாநகராட்சி நீரேற்று நிலையங்களில் இருந்து குடிநீர் சப்ளை செய்யும் நடவடிக்கைகளை உரிய முறையில் ஆய்வு செய்ய வேண்டும். பல நீரேற்று மையங்களில் மோட்டார்கள் பழுதானால் மாற்று மோட்டார்கள் வசதி இல்லை என தெரிகிறது. மோட்டார்கள் பழுதால் குடிநீர் பாதிக்கும் நிலை ஏற்படக் கூடாது. குடிநீர் கிடைக்கவில்லை என மக்கள் ரோட்டுக்கு வந்து போராட்டம் நடத்தினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரித்தார்.
வரிப்பணம் வீணடிப்பா
அமைச்சர் மூர்த்தியின் கிழக்கு தொகுதியில் திருப்பாலை மகாலட்சுமிநகர் பகுதியில் குடிநீர் குழாய்கள் பதிப்பதற்கு முன்பே புதிய ரோடுகள் அமைக்கப்பட்டதாக தகவல் தெரிந்தது.
இதனால் குழாய் பதிப்பு பணிக்காக அப்புதிய ரோடுகளை தோண்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்தது.இப்பிரச்னை தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ஒரு உதவி பொறியாளருக்கு ஒன்று அல்லது 2 வார்டுகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யலாம். ஆனால் 3 அல்லது 4 வார்டுகளை கூட கண்காணிக்கின்றனர். இதுபோன்ற கூடுதல் பளுவால் ரோடு அமைப்பதற்கு முன் அந்த வார்டில் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டதா என்பதைக் கூட கண்காணிக்க அதிகாரிகள் தவறிவிட்டனர்.
இதுகுறித்து கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

