நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை மத்திய சிறையில் கலெக்டர் பிரவீன்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். கைதிகளின் குறைகளை கேட்டறிந்தார். உணவின் தரம் குறித்து பரிசோதித்தார். கைதிகளுக்கு வழங்கப்படும் தொழில்கள் குறித்து கேட்டறிந்தார்.
பெண்கள் சிறையையும் பார்வையிட்டார். பின்னர் மேலுார் அருகே செம்பூரில் அமைய உள்ள புதிய சிறை குறித்து எஸ்.பி., சதீஷ்குமாரிடம் கேட்டறிந்தார். மொத்தம் 45 நிமிடங்கள் ஆய்வு நடந்தது.