ADDED : அக் 12, 2024 04:48 AM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவராத்திரி விழா நடக்கிறது. கோயில் விசாக கொறடு மண்டபத்தில் கோவர்த்தனாம்பிகை அம்பாள் தினம் ஒரு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார்.
உச்ச நிகழ்ச்சியாக இன்று (அக். 12) சுவாமி, தெய்வானை தங்க மயில் வாகனத்தில் பசுமலை அம்பு போடும் மண்டபத்திற்கு சென்று அம்பு எய்தல் விழா நடக்கும். அதற்காக அம்பு போடும் மண்டபத்தில் துாய்மைப் பணிகள் முடிந்து வர்ணம் தீட்டும் பணி நடக்கிறது.
