/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வரி கேட்டு வருவோர் வசதி செய்து தருவதில்லை; மாநகராட்சி 78 வது வார்டு மக்கள் கேள்வி
/
வரி கேட்டு வருவோர் வசதி செய்து தருவதில்லை; மாநகராட்சி 78 வது வார்டு மக்கள் கேள்வி
வரி கேட்டு வருவோர் வசதி செய்து தருவதில்லை; மாநகராட்சி 78 வது வார்டு மக்கள் கேள்வி
வரி கேட்டு வருவோர் வசதி செய்து தருவதில்லை; மாநகராட்சி 78 வது வார்டு மக்கள் கேள்வி
ADDED : பிப் 28, 2024 07:35 AM

மதுரை : பத்து ஆண்டுகளாக பாதாள சாக்கடை, ரோடு வசதி இல்லாததுடன், மழைக்காலங்களில் தெருவுக்குள் செல்ல முடியாத அளவுக்கு தண்ணீர் தேங்கியும், மாடுகள் தொல்லையாலும் பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றனர் மதுரை மாநகராட்சி 78 வது வார்டு கோவலன் நகர் பகுதி பொதுமக்கள்.
இந்த வார்டில் ஜீவா நகர் 2வது தெரு, கோவலன் நகர் 1 - 8 தெருக்கள், விரிவாக்கப்பகுதி, மீனாம்பிகை நகர் 1 முதல் 9 தெருக்கள், அங்கயற்கண்ணி தெரு 1 - 5 தெருக்கள், சத்யசாய் நகர், சுப நகர், இ.பி. காலனி, லட்சுமி நகர், மணிமேகலை தெரு பகுதிகள் அடங்கியுள்ளன.
சுபநகர் செல்வி:பத்தாண்டுகளாக பாதாள சாக்கடை வசதி இல்லை. குடிநீர் பல ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. மழைநீர் வடிகால் வாய்க்கால் இல்லாததால் தெருக்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. வெளியில் செல்ல முடியவில்லை. மாநகராட்சி அதிகாரிகள் இப்பகுதிக்கு நிதி ஒதுக்காததுடன், ரோடு அமைத்தும் தரவில்லை. பலமுறை மண்டலத் தலைவர், மாநகராட்சி கமிஷனர், கலெக்டர் என பலரிடமும் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. வரி கேட்டு வருகின்றனரே தவிர, வசதிகளை செய்து தர மறுக்கின்றனர்.
மீனாம்பிகை நகர் மணி: சத்ய சாய் நகர் பின்புறம் மாடக்குளம் உபரி நீர் கண்மாய் வாய்க்கால் பல ஆண்டுகளாக துார் வாரப்படாமல் உள்ளது. பிளாஸ்டிக் குப்பை நிறைந்து கழிவுநீர் வெளியேற முடியாமல் நீண்ட காலமாக தேங்கி நிற்கிறது. கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. இந்த வாய்க்காலை துார்வாரி ஆக்கிரமிப்பை அகற்றினால், பல பகுதியில் கொசுத் தொல்லை குறையும். சந்தன நகர் பூங்காவை விரிவுபடுத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். இதனால் நடைப்பயிற்சியாளர்கள் பயன் பெறுவர்.
கவுன்சிலர் தமிழ்ச்செல்வி (தி.மு.க.,) : மணிமேகலை தெருவில் ரோடு அமைத்து தந்துள்ளேன். கோவலன் நகர் 1, 2 ,3, 5 ஆகிய தெருக்களில் ரூ. 25 லட்சம் செலவில் நகர்ப்புற சுகாதார மையம் அமைக்கப்பட்டுள்ளது. மீனாம்பிகை 8, 9 தெருக்கள், சர்ச் ரோடு, இந்திரா நகர், பள்ளிவாசல் தெரு ஆகிய பகுதிகளில் சிமென்ட் ரோடு அமைத்துள்ளேன். எம்.பி., நிதியிலிருந்து தென்றல் நகர் பகுதியில் பேவர்பிளாக் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. சலவை கூடத்திற்கு மராமத்து , கழிவறை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. பொது நிதியிலிருந்து தெருவிளக்குகள் அமைத்துள்ளேன்மண்டலத்தில் கவுன்சிலருக்காக ஒதுக்கப்பட்ட நிலையில் சுப நகர். இ.பி நகர், பாலாஜி நகர் பகுதியில் மின்விளக்குகள் அமைத்துள்ளேன். தொடர்ந்து பல பகுதிகளுக்கு ரோடு அமைக்கும் பணி நடைபெற உள்ளது. மத்திய அரசின் ஜல்ஜீவன் குடிநீர் திட்டத்திற்கான பணிகள் நிறைவடைந்துள்ளது. புதிய ரோடு அமைப்பதற்கான பணிகள் இனி தொடங்கும். குறைகளை மக்களிடம் கேட்டறிந்து உடனுக்குடன் அந்தந்த அதிகாரிகளை வைத்து நிவர்த்தி செய்து வருகிறேன் என்றார்.

