/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பா.ஜ.,வில் தொகுதிக்கு 2 வேன்களில் சென்று ஒருகோடி பேரிடம் கருத்து கேட்பு * தேர்தல் அறிக்கை தயாரிக்க ஏற்பாடு

ADDED : மார் 09, 2024 07:44 AM
மதுரை : லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக பா.ஜ., சார்பில் தமிழகம் முழுவதும் தொகுதிக்கு 2 வேன்களில் சென்று ஒரு கோடி பேரிடம் கருத்துக் கேட்க உள்ளனர்.
இதற்காக நேற்று முன்தினம் இரவு 8:00 முதல் 9:30 மணி வரை எச்.ராஜா தலைமையில் 'ஜூம் மீட்டிங்' நடந்துள்ளது. அனைத்து தொகுதிகளிலும் உள்ள நிர்வாகிகள், தேர்தல் அறிக்கை குழுவில் உள்ளவர்கள் மத்தியில் அவர் பேசியுள்ளார்.
இன்னும் ஓரிரு நாட்களில் கருத்துக் கேட்பு பெட்டிகளுடன் தொகுதிக்கு 2 வேன்கள் வர உள்ளன. அவை தொகுதி முழுவதும் சுற்றி வந்து பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை மனுக்களாக பெறும். அதேபோல 'நமோ ஆப்' மூலமும் கருத்து தெரிவிக்கலாம். இவையெல்லாவற்றையும் சேர்த்து மாநில அளவில் பரிசீலித்து தேசிய அளவுக்கு கொண்டு சென்று, அந்தந்த மாநிலங்களை மையமாகக் கொண்டு தேர்தல் அறிக்கை தயாரித்து வெளியிட உள்ளனர்.
மதுரை தொகுதி தேர்தல் அறிக்கை குழு பொறுப்பாளர் சிவபிரபாகர் கூறியதாவது: தொகுதியின் முக்கியத்துவத்தை அறிந்து தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. இதற்காக தொழில், வர்த்தகம் உட்பட பல்வேறு அமைப்புகளிடம் கருத்து கேட்டுள்ளோம். நாங்களும் சில கருத்தை வலியுறுத்த எண்ணியுள்ளோம். மதுரையில் வாகன நெரிசல் அதிகரிப்பதால், வரும் பக்தர்களுக்கு வசதிகளை மேம்படுத்த வேண்டும். இதற்கு மதுரையின் வடபகுதி ரிங்ரோடு பணியை முடிக்க வேண்டும். மதுரை வரும் வாகனங்களை நகருக்கு வெளியே நிறுத்தி, பக்தர்கள் ஆன்மிக தலங்களுக்கு செல்ல சிறப்பு பஸ்களை இயக்கலாம் என்பது உட்பட பல கருத்துகளை தெரிவிக்க உள்ளோம் என்றார்.