sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கடவுளை முழுமையாக சரணடைதலே பக்தி: சுவாமி சிவயோகனந்தா பேச்சு

/

கடவுளை முழுமையாக சரணடைதலே பக்தி: சுவாமி சிவயோகனந்தா பேச்சு

கடவுளை முழுமையாக சரணடைதலே பக்தி: சுவாமி சிவயோகனந்தா பேச்சு

கடவுளை முழுமையாக சரணடைதலே பக்தி: சுவாமி சிவயோகனந்தா பேச்சு


ADDED : மார் 19, 2024 06:09 AM

Google News

ADDED : மார் 19, 2024 06:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : கடவுளை முழுமையாக சரணடைதலே பக்தி என சின்மயா மிஷன் சுவாமி சிவயோகானந்தா பேசினார்.

மதுரை காஞ்சிமடம் சார்பில் பகவத்கீதை தொடர் சொற்பொழிவு நடந்தது.

இதில் சுவாமி சிவயோகானந்தா பேசியது: பக்தியின் உயர்ந்த இயல்புகளையும், சரணாகதி தத்துவத்தையும் குறித்து பகவத்கீதை பதினெட்டாம் அத்தியாயத்தில் அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் விளக்குகிறார். கடவுள் ஒன்றாகவும், பல வடிவங்களைத் தாங்கியும், எல்லா உயிர்களிடத்தும் நீக்கமற நிறைந்துள்ளார். கடவுளிடத்தில் முழுமையாக சரணடைதலே பக்தியாகும்.

பக்தி என்பது கடவுளிடம் ஒன்றைக் கொடுத்து அதைக் காட்டிலும் அதிக அளவு எதிர்பார்க்கும் பண்டமாற்று வியாபாரமல்ல.

என்மீது முழுமையான நம்பிக்கை கொண்டு, என்னையே சார்ந்து செயல்புரிவோரை நான் எல்லாவித பாபங்களில் இருந்தும் விடுவிக்கின்றேன் என்கிறார் கிருஷ்ணர். அறியாமை, அபிமானம் , அஹங்காரம் முதலியவற்றில் இருந்து நம்மை விடுவிப்பதே விடுதலையாகும். சிந்தையை எனதாக்கி செயல்புரியும் பக்தர்களுக்கு துணையிருப்பேன் என்கிறார் கிருஷ்ணர். இவ்வாறு பேசினார்.

ஏற்பாடுகளை தலைவர் டாக்டர் டி. ராமசுப்பிரமணியன் செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் வெங்கடராமணி, நிர்வாகிகள் ஸ்ரீகுமார், ராம கிருஷ்ணன், ஸ்ரீ ராமன், பரத்வாஜ், ஸ்ரீதரன் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us