/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தி.மு.க.,வின் 'ஓரணியில் தமிழ்நாடு' மக்களிடம் ஆதார் கோரவில்லை; உயர்நீதிமன்றத்தில் முறையீடு
/
தி.மு.க.,வின் 'ஓரணியில் தமிழ்நாடு' மக்களிடம் ஆதார் கோரவில்லை; உயர்நீதிமன்றத்தில் முறையீடு
தி.மு.க.,வின் 'ஓரணியில் தமிழ்நாடு' மக்களிடம் ஆதார் கோரவில்லை; உயர்நீதிமன்றத்தில் முறையீடு
தி.மு.க.,வின் 'ஓரணியில் தமிழ்நாடு' மக்களிடம் ஆதார் கோரவில்லை; உயர்நீதிமன்றத்தில் முறையீடு
ADDED : ஜூலை 23, 2025 07:13 AM
மதுரை : தி.மு.க.,வினர் 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கைக்கு ஆதார் உள்ளிட்ட விபரங்களை மக்களிடம் சேகரிக்கவில்லை. ஓ.டி.பி., அனுப்ப விதித்த தடையை நீக்க வேண்டும் என அக்கட்சி தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் அதிகரை ராஜ்குமார் தாக்கல் செய்த பொதுநல மனு:
தி.மு.க., 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கை இயக்கம் நடத்துகிறது. ஆதார், வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் பிற அடையாள அட்டைகளை கேட்கின்றனர். விபரங்களை பெற்றதும் அலைபேசியில் ஓ.டி.பி.,வருகிறது. அதை தெரிவித்ததும் தி.மு.க.,வில் உறுப்பினராக சேர்ந்ததாக தகவல் வருகிறது. ஆதார் உள்ளிட்ட விபரங்களை சேகரிக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நேற்று முன்தினம் விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு,'ஓரணியில் தமிழ்நாடு' இயக்கத்தில் ஓ.டி.பி.,சரிபார்ப்பு அனுப்புவதை தடுக்க இடைக்கால தடை விதிக்கப்படுகிறது,' என உத்தரவிட்டது.தி.மு.க.,சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன், தி.மு.க.,தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் வழக்கறிஞர் பாசில் ஆஜராகி முறையிட்டதாவது:'ஓரணியில் தமிழ்நாடு' க்கு ஆதார் உள்ளிட்ட விபரங்களை மக்களிடம் கோரவில்லை. தவறான தகவல் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷனால் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் அடிப்படையிலேயே உறுப்பினர் சேர்க்கை நடக்கிறது. உறுப்பினர் சேர்க்கைக்கு சம்மதம் பெறுவதற்காகவே ஓ.டி.பி.,பெறப்பட்டது. உயர்நீதிமன்ற இடைக்காலத் தடையால் தற்போது உறுப்பினர் சேர்க்கை தொடர்பான அனைத்து பணியும் நிறுத்தப்பட்டுள்ளது. தடையை நீக்கக் கோரும் மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர். நீதிபதிகள்,'இன்று (ஜூலை 23) விசாரிக்கப்படும்,' என்றனர்.

