/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
டிஜிட்டல் கிராப் சர்வே பணி தேவையில்லை; வேளாண் அலுவலர்கள் வலியுறுத்தல்
/
டிஜிட்டல் கிராப் சர்வே பணி தேவையில்லை; வேளாண் அலுவலர்கள் வலியுறுத்தல்
டிஜிட்டல் கிராப் சர்வே பணி தேவையில்லை; வேளாண் அலுவலர்கள் வலியுறுத்தல்
டிஜிட்டல் கிராப் சர்வே பணி தேவையில்லை; வேளாண் அலுவலர்கள் வலியுறுத்தல்
ADDED : டிச 12, 2025 06:46 AM
திருப்பரங்குன்றம்: தமிழ்நாடு உதவி வேளாண் அலுவலர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் தலைவர் ஜெகதீசன் தலைமையில் நடந்தது.
மாவட்ட செயலாளர் செல்வகுமார், பொருளாளர் சண்முகசுந்தரம், அமைப்புச் செயலாளர் சுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் சந்திரசேகரன் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் பாலசுப்ரமணியன் பேசினார்.
பயிர் சாகுபடி கணக்குகள் பராமரிப்பு, அடங்கல் போன்ற பொறுப்புகள், அதிகாரங்கள் முன்பு வி.ஏ.ஒ., க்களிடம் இருந்தது. அரசு உத்தரவுப்படி 2 ஆண்டுகளாக 'டிஜிட்டல் கிராப் சர்வே' பணிகளை வேளாண் உதவி அலுவலர்கள், தோட்டக்கலை உதவி அலுவலர்கள் மேற்கொள்கின்றனர்.
ஒவ்வொரு உதவி அலுவலரும் 10 முதல் 15 கிராமங்கள் வரை அரசின் நலத்திட்டங்கள், மானியங்கள், இடுபொருள் வழங்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கின்றனர். இத்துடன் டிஜிட்டல் கிராப் சர்வே பணிகளை மேற்கொள்வது சிரமம்.
வருவாய்த் துறையில் ஒரு கிராமத்தில் வி.ஏ.ஓ., 2 உதவியாளர்கள் உள்ளனர். ஆனால் வேளாண் தோட்டக்கலை துறையில் ஒரு உதவியாளர் 10 முதல் 15 கிராமங்கள் பார்க்க வேண்டி உள்ளது. எனவே டிஜிட்டல் கிராப் சர்வே பணியில் இருந்து வேளாண், தோட்டக்கலை உதவி அலுவலர்களை விடுவிக்க தமிழக அரசிடம் கோருவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

