/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கூடுதல் பனி: குறைந்தது மகசூல் : மல்லிகை விவசாயிகள் கவலை
/
கூடுதல் பனி: குறைந்தது மகசூல் : மல்லிகை விவசாயிகள் கவலை
கூடுதல் பனி: குறைந்தது மகசூல் : மல்லிகை விவசாயிகள் கவலை
கூடுதல் பனி: குறைந்தது மகசூல் : மல்லிகை விவசாயிகள் கவலை
ADDED : டிச 23, 2025 07:11 AM
திருப்பரங்குன்றம்: அதிக பனியால் மல்லிகைப் பூ விளைச்சல் வெகுவாக குறைந்துவிட்டதால், திருப்பரங்குன்றம் வட்டார விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இந்த வட்டாரத்தில் வேடர்புளியங்குளம், சாக்கிபட்டி, தென்பழஞ்சி, நிலையூர், சூரக்குளம் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் மல்லிகை பயிரிடப்பட்டுள்ளது. சமீப நாட்களாக அதிக பனிப்பொழிவு உள்ளது. இதனால் மல்லிகை செடிகளில் பாதிப்பு ஏற்படுவதுடன், பூ விளைச்சலும் குறைந்து விட்டது.
விவசாயிகள் கூறியதாவது: சாதாரண நாட்களில் 3 வேளை பூக்கள் பூக்கும். ஏக்கருக்கு 30 - 40 கிலோ பூக்கள் கிடைக்கும். பொதுவாகவே கார்த்திகை, மார்கழியில் பனியால் விளைச்சல் குறையும். சில நாட்களாக பனிப்பொழிவும் அதிகம் இருப்பதால் விளைச்சல் மிகவும் குறைந்து விட்டது. ஏக்கருக்கு அரை கிலோ முதல் ஒரு கிலோ கிடைப்பதே அரிதாகவே உள்ளது. தற்போது நல்ல விலை கிடைக்கிறது. ஆனால் விளைச்சல்தான் இல்லை. குளிர்காலங்களிலும் மல்லிகை பூக்கள் பூப்பதற்கான தொழில் நுட்பங்களை அரசு நடைமுறைப்படுத்த எடுக்க வேண்டும் என்றனர்.

