ADDED : டிச 25, 2024 04:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : தானம் அறக்கட்டளையின் மதுரை கிரீன் அமைப்பு சார்பாக உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லுாரி வளாகத்தில் மரங்களை அறியும் நடை பயணம் நடந்தது.
அமைப்பு செயலாளர் சிதம்பரம் வரவேற்றார். மரங்களின் தாவரப் பெயர்கள், அவற்றின் பயன்பாடுகளை மதுரை அமெரிக்கன் கல்லுாரி தாவரவியல் பேராசிரியர் ஸ்டீபன் விளக்கினார். பிற கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இயற்கை ஆர்வலர் கந்தவேல் நன்றி கூறினார்.

