/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நீட் தேர்வு ரத்து ரகசியம் என்ன? உதயநிதிக்கு உதயகுமார் கேள்வி
/
நீட் தேர்வு ரத்து ரகசியம் என்ன? உதயநிதிக்கு உதயகுமார் கேள்வி
நீட் தேர்வு ரத்து ரகசியம் என்ன? உதயநிதிக்கு உதயகுமார் கேள்வி
நீட் தேர்வு ரத்து ரகசியம் என்ன? உதயநிதிக்கு உதயகுமார் கேள்வி
ADDED : மே 15, 2024 06:05 AM
திருமங்கலம் : திருமங்கலம் மேலகோட்டையில் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் நடந்தது.
இதை தொடங்கி வைத்து முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறியதாவது: கல்வி கடன் ரத்து எப்போது கிடைக்கும் என மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர். மின் கட்டணம் விண்ணை முட்டும் அளவு உயர்ந்து உள்ளது. மாதம் ஒரு முறை மின் கணக்கீடு என தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை தி.மு.க., நிறைவேற்றவில்லை. மக்களைப்பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. ஏனென்றால் 'நீட் தேர்வு ரத்து ரகசியம் எங்களிடத்தில் இருக்கிறது' என்று சொன்ன உதயநிதி லண்டனில் இருக்கிறார்.
ஆனால் இங்கே 1.5 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதிக் கொண்டிருக்கிறார்கள். நீட் தேர்வு ரத்து ரகசியத்தை பற்றி கவலைப்படாமல் கடல் கடந்து சுற்றுலா சென்றுள்ளார். விளையாட்டு துறை அமைச்சர் விளையாட்டு தனமாக உள்ளார் என்றார்.