/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ராமஜென்ம பூமி அறக்கட்டளை நிர்வாகி சரஸ்வதி சங்கராச்சாரியாருக்கு வரவேற்பு

ADDED : ஏப் 06, 2024 05:14 AM

மதுரை : காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வேண்டுகோள்படி தென்மாநில கோயில்களுக்கு ராமஜென்ம பூமி அறக்கட்டளை நிர்வாகி வாசு தேவானந்த சரஸ்வதி சங்கராச்சாரியார் புனித யாத்திரை மேற்கொண்டுள்ளார்.
நேற்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசித்துவிட்டு சின்ன சொக்கிகுளம் காஞ்சி சங்கர மடத்திற்குச் சென்றார். தலைவர் ராமசுப்பிரமணியன், செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் வெங்கட் ரமணி, ராதாகிருஷ்ணன் சாஸ்திரிகள், ராமேஸ்வர சங்கர மடத்தின் நிர்வாகி ஆடிட்டர் சுந்தர், அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு முன்னிலையில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
சரஸ்வதி சங்கராச்சாரியார் பேசியதாவது: நாட்டின் கவுரவத்தை காப்பாற்ற நடந்தது தான் ராமர் கோயில் பிரதிஷ்டை. இதை பிரதமரே செய்துள்ளார். சனாதன தர்மத்தை கட்டிக் காத்து வருகிறார். 500 ஆண்டுகளாக இருந்த ராமர் கோயில் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. நாட்டில் ராம ராஜ்ஜியம் ஏற்பட வழிகாட்டியுள்ளது என்றார்.
பின் ஸ்ரீரங்கம் புறப்பட்டார். சங்கரானந்த கிரி பிரமானந்த சரஸ்வதி, தக் ஷிண பாரத யாத்திரை குழு பொறுப்பாளர் வேணுகோபால் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.