/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் வளர்ச்சி வாரியம் அமைக்க வலியுறுத்தல்
/
மதுரையில் வளர்ச்சி வாரியம் அமைக்க வலியுறுத்தல்
ADDED : செப் 17, 2024 05:18 AM
திருப்பரங்குன்றம், : காமராஜர் மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தலைவர் அய்யல்ராஜ் தலைமையில் நடந்தது. திருப்பரங்குன்றம் தொகுதித் தலைவர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.
மாநில முதன்மைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கொள்கை பரப்பு துணைச் செயலாளர் ஈஸ்வரன் பேசினர். நிர்வாகிகள் உதயகுமார், ஐஸ்வர்யா, காசிவிசுவநாதன், செல்லபாண்டியன், தயாநிதி, சுயம்புலிங்கம், சரவணன், மணி, அரவிந்தன் பங்கேற்றனர்.
கூட்டத்தில், ''மாநகராட்சியில் விரிவாக்கம் செய்த வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கும் முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டப் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
தென் மாவட்டங்களின் வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த தொழில், வேளாண் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தென் மண்டல வளர்ச்சி வாரிய அலுவலகத்தை மதுரையில் அமைக்க வேண்டும்.
இதனை வலியுறுத்தி காமராஜர் மக்கள் கட்சி சார்பில் செப். 21ல் மதுரை பழங்காநத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது. செயற்குழு உறுப்பினர் கோபிநாத் நன்றி கூறினார்.

