ADDED : ஏப் 05, 2024 05:42 AM
கோயில்
அவிட்டத்தின் அவதாரம், காஞ்சி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மாதாந்திர நட்சத்திர விழா, விக்ரகத்திற்கு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை காலை 9:00 மணி, அயோத்தி ராமஜென்ம பூமி அறக்கட்டளை நிர்வாகி வாசுதேவானந்த சரஸ்வதி சுவாமிகள் வருகை, மதியம் 3:00 மணி, கடவுளின் நாமங்கள் என்ற தலைப்பில் மீனாட்சி மிஷன் மருத்துவமனை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி சிறப்பு சொற்பொழிவு, மாலை 6:30 மணி. காஞ்சி காமகோடி மடம், பெசன்ட் ரோடு, மதுரை.
பங்குனி திருவிழா - 108 கலச தீர்த்தாபிஷேகம், திருவிளக்கு பூஜை, குரோதி வருட பஞ்சாங்கம் வாசித்தல்: தேவி கருமாரியம்மன் கோயில், கான்பாளையம் குறுக்குத் தெரு, மதுரை, தலைமை:தலைவர் பெரியசேகரன், காலை 7:00 மணி முதல்.
அம்ருத சஞ்ஜீவினி வழிபாடு: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், அனுப்பானடி, நடுத்தெரு, மதுரை, தலைமை: திருவருட்பிரகாச வள்ளலார், மாலை 5:30 மணி.
பக்தி சொற்பொழிவு
ராமநாம சங்கீர்த்தனம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.
சத்சங்கம், பாராயணம், நாமஜெபம்: நிகழ்த்துபவர் - சிவானந்த சுந்தரனாந்தா, தெய்வநெறிக் கழகம், மீனாட்சி கோயில், தெற்காடி வீதி, மதுரை, மாலை 6:00 மணி.
திருக்குறள்: நிகழ்த்துபவர் - ராமச்சந்திரன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
விவேக சூடாமணி: நிகழ்த்துபவர் - நித்ய சத்வானந்தா, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் சாலை, காலை 10:30 மணி.
அகண்டநாமம், அபிஷேகம், அன்னதானம் மற்றும் ஸத்ஸங்கம்: நிகழ்த்துபவர் - ஹரிதாஸ், ஏற்பாடு: நமத்வார் அறக்கட்டளை, இளங்கோ தெரு, அய்யர்பங்களா, காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை.
பொது
ரமலான் சிறப்பு சர்வ சமய அமைதி பிரார்த்தனை: சேவாலயம் மாணவர் இல்லம், 24, குமாரசாமி ராஜா தெரு, செனாய்நகர், மதுரை, தலைமை: செப்சிரா செயலாளர் மோகன், பங்கேற்பு: மவ்லானா அப்துல் அஜீஸ் வாஹிதி, ஏற்பாடு: பல்சமய ஒற்றுமை நட்புறவு வளர்ச்சி மையம், மாலை 6:00 மணி.
புது யுகம் நோக்கி - கருத்தரங்கு: ஜெ.சி ரெசிடென்சி, மதுரை, சிறப்பு விருந்தினர்: ஓய்வு போலீஸ் துணைகமிஷனர் மணிவண்ணன், தலைமை: சங்கத் தலைவர் நெல்லை பாலு, ஏற்பாடு: மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம், மாலை 6:30 மணி.
பள்ளி கல்லுாரி
கல்லுாரி மற்றும் மாணவர் அமைச்சரவை மதிப்பாய்வு: லேடி டோக் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: கல்லுாரி கல்வி இணை இயக்குநர் குணசேகரன், மாலை 4:00 மணி.
பன்முக நோக்கில் சுவாமி சித்பவானந்தர் சிந்தனைகள் - கருத்தரங்கு: விவேகானந்த கல்லுாரி, திருவேடகம், தலைமை: முதல்வர் வெங்கடேசன், சிறப்புரை: வரலாற்றுத் துறை முன்னாள் தலைவர் நாகேந்திரன், காலை 9:45 மணி.
மகளிருக்கான புற்றுநோய், பொது மருத்துவ முகாம், மகளிர் மேம்பாட்டுக்குழு அறை, சிறப்புரை: கல்லுாரி செயலாளர் நவநீத கிருஷணன், யாதவர் கல்லுாரி, மதுரை. காலை 10:00 மணி.
கண்காட்சி
ஹஸ்டகாலா - கைவினைப் பொருட்கள், வீட்டு அலங்காரம், நகைகள் கண்காட்சி: ஜே.சி ரெசிடென்சி, சின்ன சொக்கிகுளம், காலை 11:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை.

