/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தொலைதுார ரயில்களில் படுக்கை வசதி பெட்டி குறைப்பு; கூடுதல் முன்பதிவில்லா பெட்டிகள் இணைப்பு
/
தொலைதுார ரயில்களில் படுக்கை வசதி பெட்டி குறைப்பு; கூடுதல் முன்பதிவில்லா பெட்டிகள் இணைப்பு
தொலைதுார ரயில்களில் படுக்கை வசதி பெட்டி குறைப்பு; கூடுதல் முன்பதிவில்லா பெட்டிகள் இணைப்பு
தொலைதுார ரயில்களில் படுக்கை வசதி பெட்டி குறைப்பு; கூடுதல் முன்பதிவில்லா பெட்டிகள் இணைப்பு
ADDED : செப் 11, 2024 06:25 AM

மதுரை : ரயில்களில் திடீர் பயணம் மேற்கொள்வோர் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணம் செய்வர். தொலை துார ரயில்களில் 2 அல்லது 3 முன்பதிவில்லா பெட்டிகளே இணைக்கப்படுவதால் கூட்ட நெரிசலில் பயணிகள் சிரமப்படுகின்றனர்.
அவர்களின் வசதிக்காக வரும் 2025 ஜனவரி முதல் 4 முன்பதிவு இல்லா பெட்டிகளை இணைக்க ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
திருவனந்தபுரம் -- மதுரை அமிர்தா விரைவு ரயிலில் (எண்: 16343) 2025 ஜன., 20 முதல் ஒரு 2ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி குறைக்கப்பட்டு கூடுதலாக ஒரு முன்பதிவில்லா பெட்டியுடன், நான்கு முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளுடன் இயக்கப்படும்.
இதேபோல மறு மார்க்கத்தில் மதுரை - திருவனந்தபுரம் அமிர்தா விரைவு ரயில் (16344) ஜன., 21 முதல் இந்த வசதியுடன் இயக்கப்படும்.
திருநெல்வேலி -- மேற்குவங்கம் புரூலியா விரைவு ரயில் (22606/22605) இரு மார்க்கத்திலும் ஜனவரி இறுதி வாரம் முதல் 4 முன்பதிவு இல்லா பெட்டிகளுடன் இயக்கப்படும். பாலக்காடு -- சென்னை சென்ட்ரல் -- பாலக்காடு, புதுச்சேரி -- கன்னியாகுமரி - - புதுச்சேரி, விழுப்புரம்-கரக்பூர் -- விழுப்புரம், புதுச்சேரி -- மங்களூர் -- புதுச்சேரி, எர்ணாகுளம் -- வேளாங்கண்ணி -- எர்ணாகுளம், திருவனந்தபுரம் வடக்கு -- நீலாம்பூர் -- திருவனந்தபுரம் வடக்கு, மைசூரு -- சென்னை சென்ட்ரல் -- மைசூரு காவிரி விரைவு ரயில், ஆலப்புழா -- சென்னை சென்ட்ரல் -- ஆலப்புழா, திருவனந்தபுரம் -- சென்னை சென்ட்ரல் -- திருவனந்தபுரம், நாகர்கோவில் - - சென்னை சென்ட்ரல் -- நாகர்கோவில், ஐதராபாத் -- சென்னை சென்ட்ரல் -- ஐதராபாத், ஈரோடு -- சென்னை சென்ட்ரல் -- ஈரோடு, ஏற்காடு விரைவு ரயில் ஆகியவற்றில் ஜனவரி இறுதி வாரம் முதல் சில 2 ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் குறைக்கப்பட்டு, 4 முன்பதிவு இல்லா பெட்டிகளுடன் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

