/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
காகிதங்களை மாற்றினால் புரிந்துணர்வு ஒப்பந்தமா; ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.,விமர்சனம்

ADDED : செப் 16, 2024 05:03 AM
திருப்பரங்குன்றம்: ''புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என்ற பெயரில் காகிதங்கள்தான் மாற்றிக் கொள்ளப்பட்டுள்ளது'' என அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா விமர்சனம் செய்துள்ளார்.
அவர் கூறியதாவது: தி.மு.க., ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளில் பலமுறை முதல்வர் ஸ்டாலின் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளார். தற்போதும் ரூ. 7 ஆயிரத்து 500 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளதாக கூறுகிறார். புரிந்துணர்வு ஒப்பந்தம் என்ற பெயரில் காகிதங்கள்தான் மாற்றிக்கொள்ளப்பட்டுள்ளது. இத னால் எந்த நன்மை இல்லை. முதல்வராக இருந்த பழனிசாமி வெளிநாடு சென்ற போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் வெள்ளை அறிக்கை கேட்டார். பழனிசாமியும் கொடுத்தார். தற்போது பழனிசாமி வெள்ளை அறிக்கை கேட்கிறார். ஸ்டாலின் அதற்கு பதில் கூறாமல் திசை திருப்பும் வகையில் பேசுகிறார்.
திருமாவளவன் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு கொடுத்துள்ளதை வரவேற்கிறோம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, பழனிசாமி முதல்வர்களாக இருந்தபோது மது ஒழிப்பை கடைபிடித்தனர். ஏற்கனவே ஜெயலலிதா, பழனிசாமி ஆட்சிகளில் தலா 500 கடைகள் மூடப்பட்டன.
தி.மு.க., ஆட்சியில் கடைகளின் எண்ணிக்கை குறையவில்லை. திருமாவளவன் ஆட்சியில் பங்கு என கூறி வருவது தி.மு.க., வுக்கு புது பிரச்னையை எற்படுத்தியுள்ளது என்றார்.