/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஒற்றை செங்கலை காட்டி ஏமாற்றுகிறார் அமைச்சர் உதயநிதி மீது பிரேமலதா குற்றச்சாட்டு
/
ஒற்றை செங்கலை காட்டி ஏமாற்றுகிறார் அமைச்சர் உதயநிதி மீது பிரேமலதா குற்றச்சாட்டு
ஒற்றை செங்கலை காட்டி ஏமாற்றுகிறார் அமைச்சர் உதயநிதி மீது பிரேமலதா குற்றச்சாட்டு
ஒற்றை செங்கலை காட்டி ஏமாற்றுகிறார் அமைச்சர் உதயநிதி மீது பிரேமலதா குற்றச்சாட்டு
ADDED : ஏப் 16, 2024 04:45 AM

திருப்பரங்குன்றம்: ''தேர்தல் காலங்களில் அமைச்சர் உதயநிதி எய்ம்ஸ் மருத்துவமனையின் ஒற்றை செங்கலை காட்டி தமிழக மக்களை ஏமாற்றி வருகிறார்'' என தே.மு.தி.க.,பொதுச் செயலாளர் பிரேமலதா பேசினார்.
விருதுநகர் தொகுதியில் தே.மு.தி.க., வேட்பாளர் விஜயபிரபாகரனை ஆதரித்து மதுரை திருப்பரங்குன்றத்தில் அவர் பேசியதாவது: இங்கு எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவாக கட்டி முடிக்க விஜய பிரபாகரன் டில்லியில் குரல் கொடுப்பார்.
அமைச்சர் உதயநிதி எப்போது தேர்தல் வந்தாலும் ஒரு செங்கலை தூக்கிக்கொண்டு வருகிறார். அடுத்து 'நீட்' தேர்வுக்காக ஒரு முட்டையை தூக்கிக் கொண்டு வருவார். அவர் எப்போதும் ஒரு செங்கலை காண்பித்து மக்களை ஏமாற்றுகிறார்.
மக்களுக்காக உழைப்பவர் யார். ஏமாற்றுபவர்கள் யார் என புரிந்து கொள்ள வேண்டும். விஜய்பிரபாகரன் மதுரை காமராஜ் பல்கலை பிரச்னைகளை தீர்த்து வைப்பதுடன், விமான நிலைய விரிவாக்கம், திருப்பரங்குன்றத்தில் சென்ட் தொழிற்சாலைக்கு குரல் கொடுப்பார்.
எங்கள் செலவில் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.6 லட்சம் கொடுத்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்றுவோம். விருதுநகர் தொகுதியில் இலவச தையல், கம்ப்யூட்டர் பயிற்சி, நீட் கோச்சிங் சென்டர்களை இலவசமாக அமைப்போம் என்றார்.
திருமங்கலம்: கப்பலூர், திருமங்கலம், செங்கப்படையில் அவர் பேசியதாவது: விஜய பிரபாகரன் வெற்றி பெற்றால் கப்பலுாரில் டோல்கேட் அகற்றப்படும் என்றார்.
அப்போது டோல்கேட் எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு சார்பில் இன்று (ஏப். 16) திருமங்கலம் பகுதியில் நடக்கும் கடையடைப்பு போராட்ட நோட்டீசை வழங்கினர்.
உடனே பிரேமலதா, 'கடை அடைப்பு போராட்டம் வேண்டாம். பத்து ஆண்டுகளாக காங்., வேட்பாளர் மாணிக்கம்தாகூர் இத்தொகுதிக்கு எந்த வேலையும் செய்யவில்லை. எனவே அவரை புறக்கணித்து, ஓய்வு கொடுங்கள் என்றார். இந்நிகழ்ச்சிகளில் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா, முன்னாள் அமைச்சர் உதயகுமார் பங்கேற்றனர்.

