/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அவசர சிகிச்சைக்கு சேர்ந்தாலும் 'இன்சூரன்ஸ்' தொல்லை தீர்வு கிடைக்காமல் நோயாளிகள் அவதி
/
அவசர சிகிச்சைக்கு சேர்ந்தாலும் 'இன்சூரன்ஸ்' தொல்லை தீர்வு கிடைக்காமல் நோயாளிகள் அவதி
அவசர சிகிச்சைக்கு சேர்ந்தாலும் 'இன்சூரன்ஸ்' தொல்லை தீர்வு கிடைக்காமல் நோயாளிகள் அவதி
அவசர சிகிச்சைக்கு சேர்ந்தாலும் 'இன்சூரன்ஸ்' தொல்லை தீர்வு கிடைக்காமல் நோயாளிகள் அவதி
ADDED : மே 18, 2024 04:53 AM
மதுரை, : மதுரை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பெற வரும் நோயாளிகள்முதல்வரின் இலவச காப்பீட்டுத் திட்டம் (இன்சூரன்ஸ்) இல்லாத நிலையில் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
புறநோயாளியாக சிகிச்சை பெறுவதற்கும், மாத்திரைகள் வாங்குவதற்கும் எந்த தடையும் இல்லை. அதேநேரத்தில்உள் நோயாளியாக சிகிச்சை பெற வரும் போது குறிப்பாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமெனில் முதல்வரின் இலவச காப்பீட்டு திட்ட அட்டை கண்டிப்பாக வேண்டும் என்கின்றனர்.
முன்கூட்டியே காப்பீடு பெறாதவர்கள் அவசர சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டாலும் உடனடியாக அறுவை சிகிச்சை செய்வதில்லை. முதலில் காப்பீட்டு எண்ணாவது வாங்கி வர வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர்.
வீட்டு உறுப்பினர்களுக்கு அறுவை சிகிச்சை என்றால் குடும்பத்தலைவர் அல்லது குடும்பத்தலைவி கலெக்டர் அலுவலகம் சென்று காப்பீட்டுக்கு பதிந்து வரவேண்டும். ஆனால் பாதிக்கப்பட்டது குடும்பத் தலைவராகவோ தலைவியாகவோ இருந்தால் அவர்கள் நேரில் சென்று தான் பதிய வேண்டும்.
கலெக்டர் அலுவலகத்தில் தினமும் 50 பேருக்கு தான் காப்பீடு பதியப்படுகிறது. இதில் ரெகுலராக வருவோர் சில நேரங்களில் நோயாளிகளை வரிசையில் வரச் சொல்லி வேதனைப்படுத்துகின்றனர். இதைச் சொன்னால் மருத்துவமனையில் கண்டு கொள்வதில்லை என்கின்றனர் நோயாளிகள்.
டாக்டர்கள் கூறியதாவது:
கடந்த பத்தாண்டுகளாக இந்த நடைமுறைதான் உள்ளது. காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க அரசு வலியுறுத்துகிறது. ஆனால் விபத்து, இதய பாதிப்பு போன்ற அவசர நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை முடிந்தபின்பே காப்பீட்டு அட்டை வாங்கச் சொல்கிறோம்.
மருத்துவமனையிலேயே காப்பீடுக்கு பதியும் முறையை கொண்டு வந்தால் நோயாளிகளுக்கு சிரமமிருக்காது. இதை மருத்துவ சேவை இயக்குநரகம் தான் முடிவு செய்ய வேண்டும் என்றனர்.

