/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வாடிப்பட்டியில் 'டிரான்ஸ் பார்மர்' பழுதால் தொழில்கள் பாதிப்பு
/
வாடிப்பட்டியில் 'டிரான்ஸ் பார்மர்' பழுதால் தொழில்கள் பாதிப்பு
வாடிப்பட்டியில் 'டிரான்ஸ் பார்மர்' பழுதால் தொழில்கள் பாதிப்பு
வாடிப்பட்டியில் 'டிரான்ஸ் பார்மர்' பழுதால் தொழில்கள் பாதிப்பு
ADDED : ஏப் 05, 2024 05:42 AM
வாடிப்பட்டி : வாடிப்பட்டி துணை மின் நிலையத்தில் 'டிரான்ஸ்பார்மர்' பழுதடைந்ததால் பத்து நாட்களாக தொழில்கள் பாதித்ததுடன், கிராமத்தினர் அவதிப்படுகின்றனர்.
இங்குள்ள துணை மின் நிலையத்தில் இருந்து கச்சைக்கட்டி எல்லையூர், ராமையன்பட்டி, தாதம்பட்டி, சானாம்பட்டி என ஏராளமான கிராமங்களுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது. இதில் உள்ள டிரான்ஸ்பார்மர் 2 வாரங்களுக்கு முன் பழுதடைந்தது. இன்றுவரை அது சரி செய்யப்படாததால் மின்விநியோகம் பெறும் கிராமங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.
இதனால்நெல் கொள்முதல் மையங்கள், ஆடை உற்பத்தி தொழில்கள் பாதித்துள்ளது. விவசாய மோட்டார்கள் துவங்கி, வீடுகளிலும் மின் மோட்டார்கள் இயங்க முடியாத நிலை உள்ளது.
தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். பகலில் வெயில், இரவில் மின்தடையால் மன, உடல் புழுக்கத்தில் துாங்க முடியாமல் தவிக்கின்றனர்.
மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், ''தற்காலிகமாக அருகேயுள்ள மின் நிலையங்களில் இருந்து சுழற்சி முறையில் மின்சாரம் வழங்கப்படுகிறது, புதிய டிரான்ஸ்பார்மார் விரைவில் அமைக்கப்படும் என்றனர்.

