/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் கண்டனம்
/
ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் கண்டனம்
ADDED : ஏப் 26, 2024 12:35 AM
மதுரை : ''மதுரை சித்திரைத் திருவிழாவில் நடந்த குளறுபடிகளுக்கு கடமையை செய்யாத அறநிலையத்துறை அதிகாரிகளே காரணம்'' என ஹிந்து ஆலயப்பாதுகாப்பு இயக்க செயலர் சுந்தரவடிவேல் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: சித்திரைத் திருவிழாவின் 2 முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம், அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி இந்தாண்டும் பக்தர்களிடையே நெருடலையும், வருத்தத்தையும் உருவாக்கியுள்ளது. அரசு விழாவாக நடத்தப்படும் இத்திருவிழாவில் தனி மனிதனுக்குத் கிடைக்கும் மரியாதையைக் கூட பக்தர்களுக்கு அறநிலையத்துறை வழங்கவில்லை.
அரசு அதிகாரிகள் ஆலோசனைகள் மட்டுமே கேட்கின்றனரே தவிர, திருவிழா சம்பந்தப்பட்ட அமைப்புகள், பக்தர்களிடம் எவ்வித முன் ஆலோசனையையும் கேட்பதில்லை. இளைஞர்களின் செயல்களை தடுக்க போலீசார் தவறிவிட்டனர். பாதிக்கப்பட்ட பக்தர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். சம்பந்தப்பட்டோருக்கு தண்டனை வழங்க வேண்டும். கடமை தவறிய அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

