/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அரசரடி டாஸ்மாக் கடை வேறு இடத்திற்கு மாற்ற வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

ADDED : மே 23, 2024 03:32 AM
மதுரை: மதுரை அரசரடி ஹார்விநகர் குடியிருப்போர் நலச்சங்கம் தலைவர் ராஜமோகன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:அரசரடி ஏ.ஏ.,ரோட்டில் டாஸ்மாக் கடை உள்ளது.
மது அருந்துவோர் காலி பாட்டில்களை குடியிருப்பு பகுதிக்குள் வீசி எறிகின்றனர். கேள்வி எழுப்புவோரை தவறாக பேசி தாக்கி மிரட்டல் விடுக்கின்றனர். பாதுகாப்பற்ற நிலை உள்ளது. நெரிசல் மிக்க பகுதியில் டாஸ்மாக் உள்ளதால், மது அருந்த வருவோர் வீடுகளுக்கு முன் வாகனங்களை நிறுத்தி இடையூறு செய்கின்றனர். மருத்துவமனை, பள்ளி உள்ளது. வேறு இடத்திற்கு டாஸ்மாக்கை மாற்றக்கோரி கலெக்டர், டாஸ்மாக் மாவட்ட மேலாளருக்கு மனு அனுப்பினோம். நடவடிக்கை எடுக்க மற்றும் சட்டவிரோதமாக செயல்படும் 'பாரை' மூட உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.என்.மஞ்சுளா, சி.குமரப்பன் அமர்வு: மனுவை அதிகாரிகள் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.