/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆவின் கொதிகலன் இயக்க காஸ் பயன்படுத்த வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
/
ஆவின் கொதிகலன் இயக்க காஸ் பயன்படுத்த வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
ஆவின் கொதிகலன் இயக்க காஸ் பயன்படுத்த வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
ஆவின் கொதிகலன் இயக்க காஸ் பயன்படுத்த வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
ADDED : ஏப் 19, 2024 05:34 AM
மதுரை: மதுரை ஆவினில் கொதிகலன்களை இயக்க சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பர்னஸ் ஆயிலுக்கு பதிலாக காஸ் பயன்படுத்த தாக்கலான வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை மானகிரி ராஜசபை தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை சாத்தமங்கலத்தில் ஆவின் நிறுவனம் உள்ளது. சுற்றிலும் குடியிருப்புகள், மருத்துவமனைகள், அரசு விடுதிகள் உள்ளன. ஆவினில் பாலை பதப்படுத்தும் கொதிகலன்களை 'பர்னஸ் ஆயில்' மூலம் இயக்கினர்.
சிம்னியிலிருந்து வெளியேறும் கந்தக புகையால் மக்களுக்கு மூச்சுத் திணறல், ஆஸ்துமா பிரச்னை ஏற்பட்டது. கொரோனா காலகட்டத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டன.
கொதிகலன்களை இயக்க மாற்று எரிபொருளாக 2021லிருந்து எல்.பி.ஜி., காஸ் பயன்படுத்தினர். இதனால் செலவு அதிகரிப்பதாகக்கூறி, மீண்டும் பர்னஸ் ஆயில் மூலம் கொதிகலன் இயக்கப்படுகிறது. கந்தக புகை வெளியாகிறது.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு புகார் அனுப்பினோம். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதற்கு ஆவின் நிர்வாகம் இழப்பீடு வழங்க வேண்டும். பர்னஸ் ஆயில் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். காஸ் அல்லது மாற்று எரிபொருள் மூலம் கொதிகலன்களை இயக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு தமிழக சுற்றுச்சூழல், வனத்துறை கூடுதல் செயலர், பால்வளத்துறை கூடுதல் செயலர், மதுரை ஆவின் பொது மேலாளருக்கு நோட்டீஸ் அனுப்பி தற்போதைய நிலை குறித்து ஜூன் முதல் வாரம் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

