/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தடம் மாறும் கைத்தறி நெசவுத் தொழில்
/
தடம் மாறும் கைத்தறி நெசவுத் தொழில்
ADDED : ஏப் 08, 2024 04:45 AM

பேரையூர் : பேரையூர் தாலுகா பி.தொட்டியபட்டி, டி. குன்னத்துார், ராமநாதபுரம் பகுதிகளில் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக நடந்து வந்த கைத்தறி நெசவுத் தொழில் பெரும் சரிவை கண்டுள்ளது. கூட்டுறவு சங்கத்தை நடத்தியவர்கள் பாவு மற்றும் நுால் சரியாக வழங்காததால் கைலி, சேலை உள்ளிட்ட நெசவுத்தொழில்கள் நலிவடைந்தன.
ஒரு குடும்பத்தில் மூன்று பேர் சேர்ந்து தினமும் ரூ.200க்கு குறைவாக வருமானம் ஈட்டுகின்றனர். போதிய வருமானம் இல்லாததால் பட்டாசு, தீப்பெட்டி தொழிற்சாலைக்கும், 100 நாள் வேலை திட்டத்திற்கும் செல்கின்றனர். இந்நிலை நீடித்தால் கைத்தறி நெசவுத் தொழிலுக்கான தடம் காலப்போக்கில் மறைந்து போய்விடும்.
நெசவுத் தொழிலுக்கு அரசு முக்கியத்துவம் கொடுத்து நெசவாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும்.

