நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை ஆதிதிராவிடர் நலம் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் உயர் கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி நடந்தது.
ஆதிதிராவிடர் நல அலுவலர் செலின் கலைச்செல்வி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட கல்வி அலுவலர் முத்து லட்சுமி, இளஞ்சிறார் நீதிக்குழும உறுப்பினர் பாண்டியராஜா, விழிப்புணர்வு கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் மலைச்சாமி, ஷீலா மார்க்கரெட் மாணவர்கள் அடைய வேண்டிய இலக்கு குறித்து பேசினர்.
இந்நிகழ்ச்சி அடுத்த கட்டமாக தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் நடைபெறும்.

