/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இலவச கம்ப்யூட்டர் பயிற்சி துவக்கம்
/
இலவச கம்ப்யூட்டர் பயிற்சி துவக்கம்
ADDED : ஆக 13, 2024 05:58 AM
சோழவந்தான் : திருவேடகத்தில் ஜி.எச்.சி.எல்., பவுண்டேஷன் சார்பில் பெண்களுக்கு 3 மாத இலவச கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பு துவங்கப்பட்டது. ஊராட்சி தலைவர் பழனியம்மாள் தலைமை வகித்தார்.
செயலாளர் சுதாபிரியா, கவுன்சிலர் வசந்த கோகிலா முன்னிலை வகித்தனர். பெட்கிராட் நிர்வாக இயக்குனர் சுப்புராமன் வரவேற்றார். தலைவர் கிருஷ்ணவேணி துவக்கி வைத்தார். பயிற்சிக்கு பின் கிராமப்புற பெண்கள் பொருளாதாரம் மேம்பட வேலை வாய்ப்புகள், சுயதொழில் துவங்க மத்திய, மாநில அரசு வழங்கும் மானியத்துடன் கூடிய வங்கி கடன் பெற்று தரப்படுவது குறித்து பவுண்டேஷன் நிதி பங்களிப்பு அலுவலர் சுஜின் விளக்கினார்.
பெட்கிராட் பொதுச்செயலாளர் அங்குசாமி, பொருளாளர் சாராள் ரூபி, பயிற்சியாளர்கள் கண்ணன், கீர்த்தி ராஜ், ஷீபா, இந்திரா பங்கேற்றனர்.

