/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அண்ணாமலை 'ரெடிமேட்' தலைவர் முன்னாள் அமைச்சர் உதயகுமார் சாடல்
/
அண்ணாமலை 'ரெடிமேட்' தலைவர் முன்னாள் அமைச்சர் உதயகுமார் சாடல்
அண்ணாமலை 'ரெடிமேட்' தலைவர் முன்னாள் அமைச்சர் உதயகுமார் சாடல்
அண்ணாமலை 'ரெடிமேட்' தலைவர் முன்னாள் அமைச்சர் உதயகுமார் சாடல்
ADDED : ஏப் 16, 2024 04:32 AM
அலங்காநல்லுார்: 'பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை ஒரு ரெடிடே் தலைவர்' என முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறினார்.
மதுரை பொதும்பு பகுதியில் தேனி அ.தி.மு.க., வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து முன்னாள் அமைச்சர் உதயகுமார் பிரசாரம் செய்தார். அவர் கூறியதாவது:
தேனி தி.மு.க., வேட்பாளர் அ.தி.மு.க.,வில் தங்கத்தமிழ்ச் செல்வனாக இருந்தவர், தற்போது தகர தமிழ்ச் செல்வனாக மாறிவிட்டார்.
பா.ஜ.,வுடன் கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம் எனக் கூறியவர் தினகரன். அவர் தன் மீதுள்ள 'பெரா வழக்கை' ரத்து செய்ய பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்துள்ளார். கச்சத்தீவை மீட்க பா.ஜ., பத்தாண்டுகளில் ஒரு துரும்பை கூட எடுத்துப் போடவில்லை.
அண்ணாமலை ஒரு ரெடிமேட் அரசியல் தலைவர். அவருக்கு ஆளும் பண்பு, தலைமைப் பண்பு இல்லை. காலி பெருங்காய டப்பாவாக உள்ளார். தோல்வி பயத்தில் தெரு சண்டைக்கு போவது போல பேசி வருகிறார்.
ஸ்டாலின் மகனும், மருமகனும் ரூ.30 ஆயிரம் கோடி கொள்ளையடித்ததாக அமைச்சர் தியாகராஜன் கூறியிருந்தார். அதில் ஒரு வீட்டுக்கு ரூ.10 ஆயிரம் கொடுக்கலாம். ஆனால் ரூ.500, 1000 தான் கொடுக்க உள்ளனர் என்றார்.

