/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பஸ் விட்டது போதும்... நாங்க படுற பாடும் போதும்... வடிவேல் பாணியில் புலம்பும் வடிவேல்கரை மக்கள்

ADDED : மே 19, 2024 04:26 AM

மதுரை, மே 19-
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் வடிவேல்கரை ஊராட்சியில் வசிக்கும் மக்கள் மோசமான ரோடு காரணமாக பஸ்சிற்காக பலமணி நேரம் காத்து கிடக்கும் நிலை உள்ளது. வடிவேல்கரை கண்மாய் கரைகள் குப்பை மேடாக காட்சியளித்து சுகாதார சீர்கேடுக்கு வழிவகுக்குகிறது.
இப்பகுதி கார்மேகம் கூறியதாவது: இப்பகுதிக்கு, பெரியார் பஸ் ஸ்டாண்டில் இருந்து '21 பி' என்ற ஒரே ஒரு பஸ் நாகமலை வழியாக இயக்கப்படுகிறது. காலை 6:00 மணி முதல் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை வந்து செல்கிறது.
சில நேரங்களில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. இதனால் 2 கி.மீ., நடந்து சென்று கீழக்குயில்குடி ரோடு சந்திப்பில் பஸ் ஏற வேண்டியுள்ளது. வடிவேல்கரை - விளாச்சேரி ரோடு குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு உதவாமல் உள்ளது.
அந்த ரோட்டில் உள்ள ரயில்வே தரைப்பாலம் மழைக்காலங்களில் மூழ்கிவிடும். அந்த ரோட்டை விரிவாக்கம் செய்து பஸ் போக்குவரத்திற்கு உகந்ததாக மாற்றினால் விளாச்சேரி, பசுமலை, பழங்காநத்தம் வழியாகவும் பெரியார் பஸ் ஸ்டாண்ட் செல்ல முடியும்.
வடிவேல்கரை கண்மாயை ஒட்டியுள்ள ரோடு திண்டுக்கல் - திருமங்கலம் நான்குவழிச் சாலையில் முடிகிறது. அந்த ரோட்டையும் சீர்படுத்தி, தெருவிளக்குகள் அமைத்து நான்குவழிச் சாலை சந்திப்பில் பஸ் ஸ்டாப் ஏற்படுத்தினால் இப்பகுதி மக்கள் அண்ணா பல்கலை வழியாக திருநகர், திருமங்கலம் செல்லும் பஸ் வசதியையும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இப்பகுதி கண்மாய் துார்வாரப்படாமல் கருவேல மரங்கள் வளர்ந்து காணப்படுகின்றன. கண்மாய் கரையோரம் குப்பை குவிந்து துர்நாற்றம் வீசுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.