நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை, : டில்லி ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை, செசி நிறுவனம் சார்பில் மதுரை காந்தி மியூசியத்தில் அமைதி, மக்கள் நலப் பொருளாதாரத்தில் ஜப்பானிய இந்திய கூட்டு முயற்சி குறித்த கலந்துரையாடல் நடந்தது.
ஜப்பான் நாட்டு பிரதிநிதி சிக்கா மொரோமி, பேராசிரியர் துலிகா பட்டாச்சார்யா, மியூசிய செயலாளர் நந்தாராவ், பொருளாளர் செந்தில்குமார், கல்வி அலுவலர் நடராஜன், வாப்ஸ் தொண்டு நிறுவன நிர்வாகி இளமதி, மஞ்சப்பை இயக்க நிர்வாகிகள் கிருஷ்ணன், பஞ்சாட்சரம் கலந்து கொண்டனர். அகிம்சை சந்தை ஒருங்கிணைப்பாளர் ஜில் ஹாரிஸ் கலந்துரையாடலை ஒருங்கிணைத்தார்.

