/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தோல்வி பயத்தால் தினகரன் இடையூறு: உதயகுமார் காட்டம்
/
தோல்வி பயத்தால் தினகரன் இடையூறு: உதயகுமார் காட்டம்
தோல்வி பயத்தால் தினகரன் இடையூறு: உதயகுமார் காட்டம்
தோல்வி பயத்தால் தினகரன் இடையூறு: உதயகுமார் காட்டம்
ADDED : ஏப் 06, 2024 03:54 AM
உசிலம்பட்டி : உசிலம்பட்டியில் தேனி அ.தி.மு.க., வேட்பாளர் நாராயணசாமிக்கு முன்னாள் அமைச்சர் உதயகுமார் ஆதரவு திரட்டினார்.
அவர் பேசியதாவது: ஸ்டாலின் 520 வாக்குறுதிகளை கொடுத்து எதையும் நிறைவேற்றவில்லை. ஜெ.. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை முடக்கி விட்டார். போதைப் பொருட்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. ஆண்டிபட்டி, சோழவந்தானில் அ.தி.மு.க., கூட்டம் நடத்தும் இடங்களில் தினகரன் வந்து இடையூறு செய்கிறார். அவருக்கு தோல்வி பயம் வந்துவிட்டதால், இதுபோன்று நடந்து கொள்கிறார். ஏப்.,9ல், பொதுச் செயலாளர் பழனிசாமி தேனி தொகுதியில் பிரசாரம் செய்கிறார் என்றார். முன்னாள் எம்.எல்.ஏ., மகேந்திரன், நகர் செயலாளர் பூமாராஜா உடன் சென்றனர்.