ADDED : ஏப் 15, 2024 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர், : பேரையூர் அருகே வத்ராப் சாலையில் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் தேர்தல் அலுவலர் ஈஸ்வரராஜா தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
தும்மநாயக்கன்பட்டியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்ற காரை சோதனை செய்த போது காங்., கட்சியைச் சேர்ந்த பேரையூர் கணேசன் 41, மணிகண்டன் 32, காமாட்சி 38, இருந்தனர். அவர்களிடம் 1998 கட்சி டோக்கன்களை பறிமுதல் செய்தனர். மூவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

