ADDED : செப் 12, 2024 05:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தை பார்வையற்ற மாற்று திறனாளிகள் முற்றுகையிட்டனர்.
மதுரையின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் மனு அளித்ததன் பேரில் அவர்களுக்கு வேடர் புளியங்குளத்தில் இலவச வீட்டு மனை பட்டா ஒதுக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில் கூடம் இரண்டு கி. மீ., தூரத்தில் உள்ள கோ புதுப்பட்டியில் உள்ளது. ஆகையால் கோ புதுபட்டியில் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என அவர்கள் தாலுகா அலுவலகம் முன்பு அமர்ந்தனர்.
இது குறித்து கலெக்டர் கவனத்திற்கு கொண்டு சென்று ஆவன செய்யப்படும் என தாசில்தார் கவிதா உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

