/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஓட்டுப்பதிவு குறைந்த பகுதியில் விழிப்புணர்வு
/
ஓட்டுப்பதிவு குறைந்த பகுதியில் விழிப்புணர்வு
ADDED : ஏப் 04, 2024 03:39 AM
மதுரை : மதுரை மாவட்டத்தில் குறைந்தளவு ஓட்டுப்பதிவு நடந்த பகுதியில், வீடுவீடாக சென்று தேர்தல் அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
கடந்த கால தேர்தல்களில் தமிழகத்தின் ஓட்டுப்பதிவு சராசரி 73.5 சதவீதமாக இருந்தது. இந்த அளவைவிட குறைவான ஓட்டுப்பதிவு உள்ள கிராமங்களில் இம்முறை ஓட்டுப்பதிவை அதிகரிக்க தேர்தல் கமிஷன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மதுரை கிழக்கு சட்டசபை தொகுதியில் 325 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இங்கு கடந்த காலங்களில் நாகங்குளம், எஸ்.ஆலங்குளம், ஆனையூர், கண்ணனேந்தல், கோசாக்குளம் போன்ற கிராமங்களில் 50 சதவீதத்திற்கும் குறைவான ஓட்டுக்களே பதிவாகி உள்ளது கண்டறியப்பட்டது.
இதையடுத்து தேர்தல் அதிகாரி சங்கீதா உத்தரவின்படி வருவாய்த்துறை அலுவலர்கள் இக்கிராமங்களுக்கு சென்றனர். வீடுவீடாக சென்று விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர். விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டினர்.

