sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

நாளையும், நாளை மறுநாளும் தமிழகத்தில் அமித்ஷா ரோடு ஷோ: பா.ஜ., வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்

/

நாளையும், நாளை மறுநாளும் தமிழகத்தில் அமித்ஷா ரோடு ஷோ: பா.ஜ., வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்

நாளையும், நாளை மறுநாளும் தமிழகத்தில் அமித்ஷா ரோடு ஷோ: பா.ஜ., வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்

நாளையும், நாளை மறுநாளும் தமிழகத்தில் அமித்ஷா ரோடு ஷோ: பா.ஜ., வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்


ADDED : ஏப் 11, 2024 06:51 AM

Google News

ADDED : ஏப் 11, 2024 06:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : நாளை (ஏப்.12) முதல் 2 நாட்கள் பயணமாக தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காரைக்குடி, மதுரை, கன்னியாகுமரியில் ரோடு ேஷா சென்று பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

லோக்சபா தேர்தல் பிரசாரத்திற்காக கடந்த ஏப்.,4, 5 ல் மத்திய அமைச்சர் அமித்ஷா வருவதாக அறிவிக்கப்பட்டது. உடல் நிலை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து நாளை தமிழகம் வரும் அமித்ஷா, மதியம் 3:05 மணிக்கு விமானத்தில் மதுரை வருகிறார்.

பின்னர் 3:15 மணிக்கு ெஹலிகாப்டர் மூலம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செல்கிறார். அங்கு ரோடு ேஷா மூலம் காரில் சென்று கூட்டணி கட்சி வேட்பாளர் தேவநாதன் யாதவுக்கு ஆதரவாக 4:50 மணி வரை பிரசாரம் செய்கிறார்.

அங்கிருந்து 4:55 மணிக்கு கிளம்பும் அமித்ஷா, மாலை 5:40 மணிக்கு மதுரை விமான நிலையம் வருகிறார். மாலை 5:50 மணிக்கு மதுரையில் ரோடு ேஷாவில் பங்கேற்று பா.ஜ.,வேட்பாளர் ராமஸ்ரீநிவாசனுக்கு ஆதரவு திரட்டுகிறார். மதுரை மேலமாசிவீதி நேதாஜி ரோடு முருகன் கோயிலில் துவங்கி, நகைக்கடை பஜார், வெங்கலக்கடைத் தெரு வழியாக விளக்குத்துாண் வரை காரில் பிரசாரம் செய்கிறார். இரவு 7:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்ய உள்ளார். கோர்ட் யார்டு மரியாட் ஓட்டலில் தங்குகிறார்.

மறுநாள் (ஏப்.,13) காலை 8:00 மணிக்கு ஓட்டலில் இருந்து புறப்படும் அமித்ஷா, காலை 8:30 மணிக்கு விமானத்தில் திருவனந்தபுரம் செல்கிறார். காலை 9:20 மணிக்கு அங்கிருந்து ெஹலிகாப்டரில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை செல்கிறார். பின்னர் காலை 9:45 மணிக்கு கன்னியாகுமரியில் ரோடு ேஷாவில் பங்கேற்று பா.ஜ.,வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

பின்னர் காலை 11:30 மணிக்கு திருவனந்தபுரம் சென்று, காலை 11:35 மணிக்கு விமானத்தில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் செல்கிறார்.






      Dinamalar
      Follow us