/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மேலுாரில் ஒலிபெருக்கியால் நிம்மதி இழக்கும் நோயாளிகள்; மார்க்கெட்டாக மாறிய மருத்துவமனை

ADDED : மே 17, 2024 06:11 AM
மேலுார்: மேலுார் அரசு மருத்துவமனை முன்பு சரக்கு வேன்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கி அமைத்து வியாபாரம் செய்வதால் நோயாளிகள் துாங்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
மேலுார் அரசு மருத்துவமனையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளி மற்றும் உள் நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர்.
இம் மருத்துவமனையின் முன்பகுதியில் பலர் ஒலி பெருக்கி மூலம் வியாபாரம் செய்வதால் நோயாளிகள் அவதிக்குள்ளாகின்றனர். மருத்துவமனைக்குள் வாகனங்களில் நோயாளிகள் வர முடியாத நிலை உள்ளது.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: மருத்துவமனையின் முன்பக்கம் வேன்களில் கூம்பு வடிவ ஒலி பெருக்கியுடன், போட்டி போட்டு சத்தத்தை அதிகப்படுத்தி காலை முதல் இரவு வரை விற்பனை செய்கின்றனர்.
ஒலி பெருக்கி சத்தத்தால் நோயாளிகள் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். ஆம்புலன்ஸ், டாக்டர்கள், ஊழியர்கள் வாகனங்களில் மருத்துவமனைக்குள் வர முடியவில்லை. அந்தளவு போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. சில காய்கறி வியாபாரிகள் விற்பனையாகாத காய்கறிகளை மருத்துவமனை காம்பவுண்டுக்குள் வீசிச் செல்வதால் அழுகி துர்நாற்றம் வீசுகிறது. நோயாளிகள் நலன் கருதி நெடுஞ்சாலை, நகராட்சி, போக்குவரத்து துறையினர் இணைந்து சரி செய்ய வேண்டும் என்றனர்.
மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறுகையில், அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் பல முறை மனு கொடுத்துள்ளோம் என்றனர்.