/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வைகாசி விசாகத்தில் முருகன் கோவில்களில் வழிபாடு
/
வைகாசி விசாகத்தில் முருகன் கோவில்களில் வழிபாடு
ADDED : மே 23, 2024 07:11 AM
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே கடவரப்பள்ளி காரகுப்பம் கிராமத்திற்கு உட்பட்ட பச்சைமலை முருகன் கோவிலில், வைகாசி விசாகத்தையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடந்தது. காலை, முருகன், வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகளும் செய்யப்பட்டு ஹோமங்கள் வளர்த்து, சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர், முருகன், வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு, தாமரை பூ அலங்காரம் செய்யப்பட்டது.
கடவரப்பள்ளி காரக்குப்பம், நாச்சிகுப்பம், வேப்பனஹள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதி பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் நகை, வேல், சேவல், கோழிகளை கோவிலுக்கு தானமாக வழங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.இதேபோல், கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவிலில், வைகாசி விசாகத்தை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை செய்து வழிபாடு நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாவட்டம் முழுவதுமுள்ள முருகன் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடுகள் நடந்தன.* கெலமங்கலம் அடுத்த ஜெக்கேரி பஞ்., உட்பட்ட சின்னட்டி கிராமத்தில், சின்ன பழனி பாலமுருகன் கோவில் உள்ளது. இங்கு நேற்று காலை முருகபெருமானுக்கு, 108 லிட்டர் பால் அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம், லட்சார்ச்சனை நடந்தது.

