/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
/
கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
ADDED : டிச 15, 2025 07:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம், 624 கன அடி நீர்வ-ரத்து இருந்தது. கர்நாடகா மாநில நீர்பிடிப்பு பகுதியில் திடீர் மழை பெய்ததால், நேற்று காலை நீர்வரத்து, 891 கன அடியாக அதிகரித்தது.
அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு, 771 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. நுங்கும், நுரையுமாக ஆற்றில் தண்ணீர் பெருக்-கெடுத்து ஓடியது. அணையின் வலது, இடது பாசன கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்பட-வில்லை. நேற்று காலை நிலவரப்படி, அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 41.33 அடிக்கு நீர் இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்-கது.

