/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சாய்ந்த நிலையிலுள்ள டிரான்ஸ்பார்மர் குடியிருப்பு பகுதியில் விபத்து அச்சம்

ADDED : டிச 10, 2025 10:21 AM

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், குடியிருப்பு பகுதி யில் சாய்ந்த நிலையிலுள்ள டிரான்ஸ்பார் பரை இடம் மாற்றக்கோரி, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட, 32வது வார்டு, சேலம் சாலையிலுள்ள சாமுண்டீஸ்வரி திருமண மண்டபம் பின்புறமுள்ள குடியிருப்பு பகுதிகளில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு, சாலையோரம் இடமிருக்கும் நிலையில் குடியிருப்பு வீடுகளின் அருகே, டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், பிளாட்டுகளின் குறுக்கே, உயர்மின்னழுத்த கம்பிகள் செல்கிறது. இது குறித்து புகாரளித்தும், நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னரும், இந்த மின் கம்பிகள் மாற்றப்பட-வில்லை.மேலும், இப்பகுதியில் குடியிருப்புகள் வராத காலத்தில், டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்ட நிலையில் தற்போது, வீடுகள் அதிகரித்த நிலையில், மின்கம்பிகள் டிரான்ஸ்பார்மரை இழுத்து சாய்த்தபடி, அபாயகரமான நிலையில் உள்ளன. பள்ளி மாணவர்கள், குழந்தைகள் அதிகம் விளையாடும் இப்பகுதியில், அபாயகர-மாக சாய்ந்த நிலையில் இந்த டிரான்ஸ்பார்மரை,
பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன் அகற்றி, சாலையோரம் செல்லும் வகையில் மின்கம்பிகள் பாதையை மாற்றியமைக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.