/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஆய்வுக்கு சென்ற தாசில்தாரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
/
ஆய்வுக்கு சென்ற தாசில்தாரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
ஆய்வுக்கு சென்ற தாசில்தாரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
ஆய்வுக்கு சென்ற தாசில்தாரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
ADDED : ஜன 10, 2024 12:27 PM
ஓசூர்: சூளகிரி அருகே, நிலப்பிரச்னை தொடர்பாக ஆய்வுக்கு சென்ற தாசில்தாரை, கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா, எர்ரண்டப்பள்ளி கிராமத்தில் சாக்கியம்மா என்ற கிராம தேவதை கோவில் உள்ளது. எர்ரண்டப்பள்ளி மட்டுமின்றி, சின்ன எர்ரண்டப்பள்ளி, மல்லசந்திரம் கிராம மக்களுக்கு குல தெய்வமாக இக்கோவில் உள்ளது. மூன்று கிராம மக்களும் ஒன்று சேர்ந்து, 10 சென்ட் நிலத்தை கோவில் அருகே வாங்கினர். இந்த நிலம் தனக்கு சொந்தமான பட்டா நிலம் என தனி நபர் ஒருவர் கூறி வருகிறார். இதனால், கிராம மக்களுக்கும், அவருக்கும் இடையே பிரச்னை ஏற்படும் சூழ்நிலை உருவானது.
இதனால், சூளகிரி தாசில்தார் சக்திவேல் சம்பவ இடத்திற்கு சென்று நேற்று விசாரணை நடத்தினார். இதில் இரு தரப்பினரும், நிலத்தை மீட்டு தரக்கோரி ஆவணங்களை காட்டி, அதிகாரியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இறுதியில், உரிய ஆவணங்களுடன் சூளகிரி தாலுகா அலுவலகம் வருமாறு கூறி விட்டு, தாசில்தார் புறப்பட்டு சென்றார். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

