/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தேர்தல் புறக்கணிப்பு அறிவித்த மக்கள் ஊருக்குள் செல்வதை தவிர்த்த கட்சியினர்
/
தேர்தல் புறக்கணிப்பு அறிவித்த மக்கள் ஊருக்குள் செல்வதை தவிர்த்த கட்சியினர்
தேர்தல் புறக்கணிப்பு அறிவித்த மக்கள் ஊருக்குள் செல்வதை தவிர்த்த கட்சியினர்
தேர்தல் புறக்கணிப்பு அறிவித்த மக்கள் ஊருக்குள் செல்வதை தவிர்த்த கட்சியினர்
ADDED : ஏப் 15, 2024 03:32 AM
தர்மபுரி: பாலக்கோடு அடுத்த வாழைத்தோட்டம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில், 3,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதிக்கு செல்லும் வழியில் ரயில்வே தரைப்பால உயரம் குறைவாக உள்ளதால் கடந்த, 60 ஆண்டுகளாக கனரக வாகனங்கள் ஊருக்குள் சென்று வர, 8 கி.மீ., துாரம் சுற்றி வர வேண்டி உள்ளது. அவசர காலத்தில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் வர வழியில்லை. இங்கு ரயில்வேக்கு சொந்தமான நிலம் உள்ளதால், சாக்கடை கால்வாய் அமைக்க அனுமதி வழங்காமல், கழிவுநீர் ஊருக்குள் தேங்கி நிற்கிறது. பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர்.
வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து, லோக்சபா தேர்தலை புறக்கணிப்பதாக, பொதுமக்கள் ஜன., 19 ல் ஊர் முகப்பில் பேனர் வைத்தனர். அரசு அதிகாரிகள் கலெக்டர் மூலம், நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தும், பொதுமக்கள் அதை ஏற்கவில்லை. இதனால், அப்பகுதிக்கு அரசியல் கட்சியினர் இதுவரை தேர்தல் பிரசாரத்திற்கு செல்லாமல் தவிர்த்து வருகின்றனர். அப்பகுதியிலுள்ள, 2 ஓட்டுச்சாவடியில், 1,700 வாக்காளர்கள் உள்ளனர். இதில், சிட்டிங், தி.மு.க., - எம்.பி., செந்தில்குமார் கடந்த தேர்தலின்போது, ரயில்வே பாலத்தை மாற்றி, உயர்மட்ட பாலம் கட்ட வாக்குறுதி அளித்தார். அதன்பிறகு அவர் வரவில்லை என, அப்பகுதி பொதுமக்கள் கூறினர்.

