/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நெடுஞ்சாலையில் கவிழ்ந்து தீப்பிடித்த டேங்கர் லாரி டிரைவர் பலி; 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
/
நெடுஞ்சாலையில் கவிழ்ந்து தீப்பிடித்த டேங்கர் லாரி டிரைவர் பலி; 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
நெடுஞ்சாலையில் கவிழ்ந்து தீப்பிடித்த டேங்கர் லாரி டிரைவர் பலி; 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
நெடுஞ்சாலையில் கவிழ்ந்து தீப்பிடித்த டேங்கர் லாரி டிரைவர் பலி; 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஜன 02, 2024 11:59 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, தேசிய நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி கவிழ்ந்து தீப்பிடித்ததில் டிரைவர் பலியானார். விபத்தால் அப்பகுதியில், 4 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
பெங்களூருவிலிருந்து, 36,000 லிட்டர் எத்தனால் ஏற்றிய டேங்கர் லாரி, கிருஷ்ணகிரி வழியாக கேரள மாநிலம் கொச்சிக்கு சென்று கொண்டிருந்தது. நேற்று மதியம், 3:45 மணியளவில் கிருஷ்ணகிரி, மேலுமலை அருகே, ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து, பயங்கர சத்தத்துடன் வெடித்து தீப்பற்றியது. கிருஷ்ணகிரி தீயணைப்புத் துறையினர் டேங்கர் லாரி தீயை அணைத்தனர்.
குருபரப்பள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சம்பவத்தின் போது, தீக்காயத்துடன் மீட்கப்பட்ட லாரி டிரைவரான, கள்ளக்குறிச்சியை சேர்ந்த ராமலிங்கம், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தார். இந்த விபத்தால், ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணி வகுத்தன. 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முன்னதாக ஓசூர், பெங்களூரு மற்றும் வட மாநிலங்களுக்கு செல்லும் வாகனங்கள், கிருஷ்ணகிரியில் இருந்து ராயக்கோட்டை வழியாக ஓசூருக்கு திருப்பி விடப்பட்டன. கிருஷ்ணகிரி, ஏ.டி.எஸ்.பி., சங்கு தலைமையில், இன்ஸ்பெக்டர் சுல்தான் மற்றும் போலீசார், டேங்கர் லாரியை அப்புறப்படுத்தி, இரவு, 8:00 மணிக்கு போக்குவரத்தை சீர்செய்தனர்.
விபத்து பகுதியான மேலுமலை
கிருஷ்ணகிரி அடுத்த மேலுமலை, ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் கடந்த, 2016 ஜூன், 3 ல் தனியார் பஸ் - லாரி மோதிய விபத்தில், 20 க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
தாழ்வான பகுதி என்பதால் இங்கு, தொப்பூர் கணவாயில் அமைக்கப்பட்டுள்ளது போல், சாலைகளில் பிரதிலிப்பு ஸ்டிக்கர், அறிவிப்பு பலகைகள், ஒலிபெருக்கிகள் மூலம், வாகன விபத்து விழிப்புணர்வு வைப்பது உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.

