/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மழை பெய்ய வேண்டி அம்மனுக்கு சிறப்பு பூஜை
/
மழை பெய்ய வேண்டி அம்மனுக்கு சிறப்பு பூஜை
ADDED : ஏப் 29, 2024 07:35 AM
ஓசூர் : ஓசூர் அருகே கர்னுார் கிராமத்தில், 200 ஆண்டு பழமையான கங்கம்மா கோவில் உள்ளது.
இங்கு, மழை பெய்ய வேண்டி யும், விவசாயம் செழிக்கவும், நோய், நொடியின்றி மக்கள் நீண்ட ஆயுளுடன் வாழவும், அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, மாரியம்மன், கரகம்மன், கங்கம்மன் ஆகிய, 3 தெய்வங்களுக்கும் பட்டு உடுத்தி, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பூஜை முடிந்த பின் அலங்கரித்த கங்கம்மா சுவாமியை, பக்தர்கள் மொபைல்போனில் புகைப்படம் எடுத்தனர். அப்போது சுவாமியின் படத்தை பார்த்தபோது, அதில் அம்மனின் வலது கண் திறக்கப்பட்டது போல் இருந்துள்ளது. இதனால் பக்தர்கள் பரவசமடைந்தனர். அம்மனின் கண் திறந்தால் நல்லது நடக்கும். மழை பொழியும், அனைவரும் நலமுடன் வாழ்வார்கள் என்ற நம்பிக்கை, பக்தர்கள் மத்தியில் உள்ளது.

