நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டத்தில், 5 லட்சம் ரூபாய் மதிப்பில், கிருஷ்ணகிரி புதுப்பேட்டை சின்னமாரியம்மன் கோவில் தெருவில் இருந்து பூங்காவன தெரு இணைப்பு சந்து, லட்சுமணன் தெரு இணைப்பு சந்து மற்றும் பஜனை கோவில் தெருவில், பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அசோக்குமார் பூஜை செய்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தங்கமுத்து, கவுன்சிலர் காயத்திரி, வட்ட செயலாளர் சரஸ்வதி, வர்த்தக அணி செயலாளர் செல்வம், அம்மா பேரவை லோகநாதன், ஐ.டி., பிரிவு மண்டல தலைவர் ராஜசேகர், ராஜாமணி உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

