/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தற்காலிக கடை ஆக்கிரமிப்பு அகற்ற கலெக்டருக்கு கோரிக்கை
/
தற்காலிக கடை ஆக்கிரமிப்பு அகற்ற கலெக்டருக்கு கோரிக்கை
தற்காலிக கடை ஆக்கிரமிப்பு அகற்ற கலெக்டருக்கு கோரிக்கை
தற்காலிக கடை ஆக்கிரமிப்பு அகற்ற கலெக்டருக்கு கோரிக்கை
ADDED : பிப் 21, 2024 01:36 AM
குளித்தலை:குளித்தலை
பஸ் ஸ்டாண்டு காந்தி சிலை பகுதியில், தற்காலிக கடைகளால் போக்குவரத்து
பாதிப்பு ஏற்படுவதாக, கலெக்டருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குளித்தலை
நகரட்சியின், தற்காலிக பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, 74
லட்சம் ரூபாய் மதிப்பில் மேம்படுத்தும் பணிகள் முடிக்கப்பட்டு, அடிப்படை
வசதிகள் முழுமை அடையாமல், அவசர கதியில் பஸ் ஸ்டாண்டு பொது மக்கள்
பயன்பாட்டுக்கு விடப்பட்டது. இந்நிலையில், போக்குவரத்து டைம் கீப்பர்
அறை, தற்காலிக பாணிபூரி, பூக்கள் கடைகள் மற்றும் தள்ளுவண்டி கடைகளால் பொது
மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. பொது மக்கள்
நலன் கருதி, நெடுஞ்சாலை துறை மற்றும் நகராட்சி இணைந்து ஆக்கிரமிப்புக்களை
அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் கலெக்டருக்கு
கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, குளித்தலை நகராட்சி கமிஷனர்
நந்தகுமார் கூறுகையில்,''பஸ் ஸ்டாண்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி,
சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

